ஜெர்மனி தேர்தல்.. பழமைவாத கட்சி வெற்றி.. மக்ரோன் வாழ்த்து!!

24 மாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3000
நேற்று பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பழமைவாத கட்சியான (des conservateurs) வெற்றி பெற்றதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தலைவர் Friedrich Merz, நாட்டின் புதிய அதிபராக (chancelier) விரைவில் பதவியேற்க உள்ளார். நேற்று மாலை தொலைபேசியூடாக புதிய அதிபர் Friedrich Merz உடன் கலந்துரையான ஜனாதிபதி மக்ரோம், தனது வாழ்த்துக்கள் பதிவு செய்திருந்தார்.
மேலும், “புதிய அதிபருடன் இணைந்து மிகப்பெரும் செயல்களை செய்ய பிரான்ஸ் தயாராக உள்ளது” எனவும் “வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட ஐரோப்பாவை கட்டி எழுப்புவோம்” எனவும் தெரிவித்தார்.