முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு
 
                    24 மாசி 2025 திங்கள் 03:39 | பார்வைகள் : 4701
மக்களுக்கான திட்டங்களை, ஜெயலலிதா பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை. தமிழகம் முழுதும் இன்று, 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,'' என, தி.மு.க., மருத்துவ அணி செயலர் எழிலன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 முதல், 50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும்.
கூட்டுறவு துறையும், தமிழக மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தமிழக அரசின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் போன்றவற்றுடன் முதல்வர் மருந்தகம் என, ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.
அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. மக்களுக்கான திட்டங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை.
வ்வாறு அவர் கூறினார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan