Paristamil Navigation Paristamil advert login

சோம்ப்ஸ்-எலிசே அரங்கில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்!!

சோம்ப்ஸ்-எலிசே அரங்கில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்!!

15 மாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 7138


பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் சோம்ப்ஸ்-எலிசே அரங்கில் (Théâtre des Champs-Élysées) ஏற்பட்ட தீ பரவலை அடுத்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று பெப்ரவரி 14,  வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Persée Opera நிகவினை பார்வையிட அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் குவிந்திருந்த வேளையில், நிலகீழ் தளத்தில் உள்ள சமையலறையில் தீடீரென தீ பரவியது. அதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக அரங்கில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தீ பெரிதளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தவில்லை எனவும்,   உடனடியாக அணைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்