பதவியில் இருந்து விலகும் கனடிய பிரதமர்...?
                    6 தை 2025 திங்கள் 16:23 | பார்வைகள் : 5862
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கனடிய ஊடகமொன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் கனடாவின் லிப்ரல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
ஏற்கனவே கட்சிக்குள் பிரதமரை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் ட்ரூடோ கட்சியிலிருந்து விலகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் எதிர்வரும் புதன்கிழமை தனது ராஜினாமா குறித்து ட்ரூடோ அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் பிரதமர் பதவியில் நீடிப்பாரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. 
 





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan