Neuilly-sur-Seine : தம்பதிகளை கட்டிவைத்து - நகை பணம் கொள்ளை!!

4 தை 2025 சனி 07:00 | பார்வைகள் : 4901
தம்பதிகள் இருவரைக் கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் Neuilly-sur-Seine (93) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவு 1 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டில் இருந்த முதிர் வயதுடைய தம்பதிகள் இருவரை கட்டி வைத்துவிட்டு வீட்டினை கொள்ளயிட்டனர்.
நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
குடும்பத்தலைவருக்கு முகத்தில் ரைஃபிள் துப்பாக்கியின் பிடியினால் இடித்த காயம் இருந்துள்ளது. அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்டவையின் பெறுமதி தெரிவிக்கப்படவில்லை.