லிபியா கடற்பகுதியில் படகு விபத்து...! 20 குடியேற்றவாசிகள் மாயம்....
3 தை 2025 வெள்ளி 13:03 | பார்வைகள் : 6888
லிபியா கடற்பகுதியில் படகிலிருந்து விழுந்த20 குடியேற்றவாசிகள் மாயமாகியுள்ளனர்.
லிபியா கடற்கரையிலிந்து 20 கிலோமீற்றர் தொலைவில் படகொன்றிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
திங்கட்கிழமை லிபியாவின் ஜூவாரா துறைமுகத்திலிருந்து 27 பேருடன் படகொன்று புறப்பட்டதாகவும் கடலில் விழுந்த 20 பேரை தவிர ஏனைய ஏழுபேருடன் பயணித்த அந்த படகை இத்தாலியின் பொலிஸ் ரோந்து பிரிவினர் லம்பெடுசா தீவில் கண்டுபிடித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லிபியாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மணித்தியாலத்தில்படகிற்குள் தண்ணீர் வரத்தொடங்கியயதாகவும், படகு ஆடத்தொடங்கியது எனவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளதுடன் பதற்றம் அச்சம் காரணமாக 20 பயணிகள் கடலில் விழுந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
கடலில் விழுந்தவர்களில் பெண்கள் சிறுவர்களும் இருந்தனர் என்றும் அவர்கள் சிரியா எகிப்து சூடானை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும் படகில் உயிர்தப்பியவர்களில் சிரியாவை சேர்ந்த சிறுவனும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan