Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்ஸ் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

இல் து பிரான்ஸ் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

2 தை 2025 வியாழன் 13:30 | பார்வைகள் : 12186


இல் து பிரான்சின் வீதிகளில் நாளை ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்மஸ் விடுமுறை இந்த வார இறுதியுடன் நிறைவுக்கு வருகிறது. மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில், சுற்றுலா சென்ற இல் து பிரான்சைச் சேர்ந்தவர்கள் நாளை முதல் வீடு திரும்ப உள்ளனர். அதை அடுத்து உள்வரும் (retours) வீதிகள் அனைத்திலும் பெரும் போக்குவரற்று நெரிசல் பதிவாகலாம் என வீதி அவதானிப்பாளர்களான Bison futé
அறிவித்துள்ளனர்.

குறிப்பாக A6 மற்றும் A10 நெடுஞ்சாலைகளில் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்