Paristamil Navigation Paristamil advert login

‘குட் பேட் அக்லி’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

‘குட் பேட் அக்லி’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

2 தை 2025 வியாழன் 10:18 | பார்வைகள் : 7072


அஜித்தின் 63வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி.'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில் ஒரு சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் களமிறங்கியுள்ளார். 

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜுன் தாஸ், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தை இயக்குவதால் ஏற்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

ஆனால் இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்ததும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது

எனவே இப்படம் 2025 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.-

வர்த்தக‌ விளம்பரங்கள்