Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ஹவாய் விமானத்தில்  திடீர் புகை-  அதிர்ச்சியில் விமான பயணிகள்

அமெரிக்காவில் ஹவாய் விமானத்தில்  திடீர் புகை-  அதிர்ச்சியில் விமான பயணிகள்

1 தை 2025 புதன் 13:13 | பார்வைகள் : 5427


அமெரிக்காவில் ஹவாய் விமானத்தில் புகை வந்ததால் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது. 

சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

ஹானோலுலுக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்தனர். 

பின்னர் விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். 

இதனால் விமானம் உடனடியாக சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.  

தீயணைப்பு துறையினர் விமானம் தரையிறங்கியதும் ஆய்வு செய்தபோது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர்.

முன்னர் விமானத்தின் காக்பிட்யில் புகை வந்ததாக கூறப்பட்டது. விமான நிலைய செய்தி தொடர்பாளர் புகை அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.    

வர்த்தக‌ விளம்பரங்கள்