சிறைச்சாலைக்குள் பொதி வீசிய இரு இளைஞர்கள் கைது!!

30 மார்கழி 2024 திங்கள் 10:35 | பார்வைகள் : 9402
சிறைச்சாலை ஒன்றுக்குள் பொதி ஒன்றை தூக்கி வீசிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Porcheville (Yvelines) நகரில் உள்ள
prison pour mineurs Porcheville சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 28, சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இரு நபர்கள் சிறைச்சாலையின் வெளியே இருந்து உள்ளே பொதி ஒன்றை தூக்கி வீசியுள்ளனர்.
அதனை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்துள்ளனர்.
இருவரும் 17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் செலுத்திவந்த ஸ்கூட்டர் திருடப்பட்டுள்ளதாகவும் அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025