இலங்கையில் அகதிகளை சந்திக்க ஜனாதிபதியிடம் அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு
30 மார்கழி 2024 திங்கள் 08:51 | பார்வைகள் : 5114
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முலத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.
எவ்வாறாயினும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்குவது தமது திணைக்களத்தின் ஊடாக அன்றி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஊடாகவே என தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan