பரிசில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் பொருட்கள். காவல்துறையினர் பறிமுதல்.

30 மார்கழி 2024 திங்கள் 07:43 | பார்வைகள் : 8506
புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் பரிசில் காவல் துறையினர் வியாபார நிலையங்களை மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அங்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுவதோடு தண்டப் பணமும் அறவிடப்படுகிறது.
காவல்துறை தலைமையகத்தின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட சில பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாமல் விற்பனையை நோக்கமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களை காவல்துறையினர் நெருங்கி வருகின்றனர்.
Aubervilliers இல் உள்ள Avenue Jean-Jaurès பகுதியில் இயங்கும் ஒரு வணிக வளாகத்தில் 15 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு குறைந்தபட்ச 1500 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் இவை மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வணிக வளாகத்தை மூடுவதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025