Yvelines : கர்ப்பிணி பெண்ணை மிரட்டி மகிழுந்தை திருடிய இருவர் கைது!!
29 மார்கழி 2024 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 7047
கர்ப்பிணி பெண் ஒருவரை கத்தியால் மிரட்டி, அவரின் மகிழுந்தை திருடிச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 28, சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Maurepas நகரில் உள்ள அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்த குறித்த பெண்ணை நெருங்கிய இரு இளைஞர்கள், அவரை திருப்பிலி ஒன்றின் மூலம் மிரட்டி அவரிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். அத்துடன் அவரது மகிழுந்தையும் திருடிக்கொண்டு சென்றனர்.
உடனடியாக அப்பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் அவரது Volkswagen Polo GTI மகிழுந்தினை திருடிச் சென்றவர்கள் துரத்துச் செல்லப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும், இச்சம்பவத்தில் காவல்துறை வீரர் ஒருவர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan