முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
27 மார்கழி 2024 வெள்ளி 01:59 | பார்வைகள் : 7345
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடிபெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும் பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.
நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக்கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1991ல் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது இவர் கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது.
எய்ம்ஸ் மருத்துவமனை
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதன் பின் இந்தாண்டு ஏப்ரல் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். வயது மூப்பு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
நேற்றிரவு, டில்லியில் உள்ள தன் வீட்டில் மன்மோகன் சிங் மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 8:06 மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மன்மோகன் சிங்கிற்கு குருஷரண் கவுர் என்ற மனைவியும், உபிந்தர் சிங், தாமன் சிங், அம்ரித் சிங் என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan