Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடிகள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடிகள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

26 மார்கழி 2024 வியாழன் 16:45 | பார்வைகள் : 11102


பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து நிகழ்நிலை நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது. 

பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT இன் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த கூறினார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற ஒன்லைன் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிரோஷ் ஆனந்த கேட்டுக் கொண்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்