பரிஸ் : €300,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!

26 மார்கழி 2024 வியாழன் 13:12 | பார்வைகள் : 12074
பரிசில் உள்ள விலையுயர்ந்த நகைகள் விற்பனை செய்யும் கடையான Printemps Nation இல் இருந்து €300,000 யூரோக்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை டிசம்பர் 23 ஆம் திகதிக்கும் மறுநாள் 24 ஆம் திகதிக்கும் உட்பட்ட இரவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த நகைக்கடைக்குள் அதிகாலை 2.43 மணி அளவில் கொள்ளையன் ஒருவர் ஜன்னல் வழியாக கடைக்குள் நுழைந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
கடை கொள்ளையிடப்பட்டுள்ளமை 24 ஆம் திகதி காலை 9.30 மணி அளவில் தெரியவந்து, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி 300,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025