Lagny-sur-Marne : இரு கொள்ளையர்கள் கைது.. 100,000 மதிப்புள்ள பொருட்கள் மீட்பு!!

25 மார்கழி 2024 புதன் 18:42 | பார்வைகள் : 15648
Lagny-sur-Marne (Seine-et-Marne) கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் கொள்ளையிட்ட 100,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று டிசம்பர் 24, செவ்வாய்க்கிழமை இரவு ஹிஜ் நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு அருகே வைத்து கொள்ளையர்களது வாகனத்தை அடையாளம் கண்டனர்.
rue Jenner வீதியில் உள்ள மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் பல மகிழுந்துகளோடு குறித்த மகிழுந்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மகிழுந்தை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர், சில நிமிடங்கள் பொறுமையாக மறைந்திருந்து கண்காணித்து கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்தனர். இரண்டாம் நபர் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.