ஓட்டுநர் இல்லா 70 மெட்ரோ ரயில்; ரூ.3,657 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
24 மார்கழி 2024 செவ்வாய் 02:54 | பார்வைகள் : 5921
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை;
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்கப்படுகின்றன.
இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.11.2024 அன்று BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். பின்னர் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும்.
BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம், 2ம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்று ஒப்பந்தங்களின் வரிசையில் இரண்டாவது ஒப்பந்தமாகும். முன்னதாக, முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, மேலும் முன்மாதிரி ரயில் ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan