சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட்
23 மார்கழி 2024 திங்கள் 13:58 | பார்வைகள் : 4468
கார்த்திக் சுப்பராஜ் தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
இந்நிலையில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வரும் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan