இஸ்ரேலியப் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் பின்னணி
24 தை 2025 வெள்ளி 16:52 | பார்வைகள் : 5863
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணயக கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்ற பின் இவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
ட்ரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது நான் பதவி ஏற்கின்ற போது ஹமாசின் பணயக் கைதிகள் விடயத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்’ என்று கடுமையான தொணியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்
'அப்படி நடக்காது விட்டால், மத்திய கிழக்கிற்கு ஒரு முழுமையான நரகத்தைக் காண்பிப்பேன்' என்றும் எச்சரித்திருந்தார்.
அடுத்த சில மணி மணித்தாயாலங்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, மறுதினமே பணயக் கைதிகள் விடுவிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டு, ஒரிரண்டு நாட்களிலேயே யுத்த நிறுத்தமும் முடிவாகிவிட்டிருந்தது.


























Bons Plans
Annuaire
Scan