சிறுவர்களை அதிகம் பாதிக்கும் 'Grippe' தொற்றுநோய். அவதானம்.

23 தை 2025 வியாழன் 20:04 | பார்வைகள் : 9896
இவ்வாண்டு 'Grippe' தொற்றுநோய், எப்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்துள்ளதோ, அதேயளவு 15 வயதிற்கு குறைந்தவர்களையும், குழந்தைகளையும் பாதித்துள்ளது என 'Santé publique France' (SPF) தெரிவித்துள்ளது.
மருத்துவ மனைகளில், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 15 வயதிற்கு குறைந்தவர்கள், குழந்தைகள் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகம் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ள Santé publique France (SPF) குழந்தைகள், சிறுவர்கள் பாடசாலைகள், காப்பகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் கூடுதலான மக்களை சந்திக்கின்றனர் இதனால் தொற்றுநோய் தாக்கம் இலகுவாக இவர்களை வந்தடைகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு, குழந்தை மருத்துவர்களின் தேசிய ஒன்றியத்தின் (SNPF) தலைவர் Brigitte Virey தெரிவிக்கையில் " குழந்தைகள், சிறுவர்களுக்கு தொற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திறன் பிரான்சில் 13.6% வீதம் மட்டுமே உள்ளது. அத்தோடு 2 வயதிற்கு மேல் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் உரிமை குழந்தைகளுக்கு இருக்கின்ற பொழுதும் பெற்றோர்கள் அதனை அனுமதிப்பதில்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025