பிரான்சில் குழாய்களில் வரும் நீரில் அழியாத நித்திய மாசுபாடுகள். UFC
23 தை 2025 வியாழன் 12:27 | பார்வைகள் : 6920
கடந்த ஆண்டு UFC எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் Paris, Buxerolles உட்பட 30 நகரங்களில் குழாய்களில் வரும் நீரில் ஏதேனும் மாசுபாடுகள் உள்ளதா என்னும் ஆய்வினை மேற்கொண்டதில் paris உட்பட பல நகரங்களில் குழாய்களில் வரும் தண்ணீரில் 'அழியாத நித்திய மாசுபடுகள்' உண்டு என்பதை கண்டறிந்துள்ளது.
4,700 க்கும் மேற்பட்ட மூலக்கூறுகளை ஒன்றிணைத்து, காற்று, மண், ஆறுகள் மற்றும் மனித உடலில் கூட காலப்போக்கில் குவிகின்றன என தெரிவிக்கும் ஆய்வு, Paris-ல் லீட்டருக்கு 6,200 ng/l எனும் அளவில் உள்ளதால் இரண்டாம் இடத்திலும், Vienne இல் உள்ள Buxerolles நகரில் லீட்டருக்கு 2,600 ng/l உள்ளதால் மூன்றாம் இடத்திலும் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாசடைவு என்பது உடனடியாக பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற போதிலும் நாளடைவில் கருவுறுதலில் விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் அதேபோல் சில புற்றுநோய்களை ஊக்குவிக்கலாம் எனவும் ஆய்வின் முடிவுகள் அறிவித்துள்ளன. குழாய் நீரை பகுப்பாய்வு செய்வது, ஒரு ஆண்டில் இரண்டு முறையேனும் நடத்தப்பட வேண்டும் என மேற்குறிப்பிட்ட ஆய்வினை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan