பலத்த காற்று : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

23 தை 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 3046
பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு, நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு Météo France எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிக்கு 40 தொடக்கம் 90 கி.மீ வரை காற்று வீசும் எனவும், Calvados, Côtes-d'Armor, Finistère, Manche, Pas-de-Calais மற்றும் Seine-Maritime ஆகிய ஆறு எல்லையோர மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் குறித்த மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் எனவும், சில மாவட்டங்களில் உள்ள பூங்காக்கங்கள், பொது இடங்கள் நண்பகலின் பின்னர் மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.