பிரான்சில் தாக்குதல்.. - அல்ஜீரிய பிரபலம் கைது.. உள்துறை அமைச்சர் தகவல்!

22 தை 2025 புதன் 10:12 | பார்வைகள் : 6958
பிரான்ஸ்-அல்ஜீரியா நாடுகளிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள நிலையில், இரு நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக TikTok சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் அல்ஜீரியாவைச் சேர்ந்த Rafik Meziane, இன்று ஜனவரி 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau அறிவித்துள்ளார். 300,000 பேர் பின் தொடரும் TikTok கணக்கு வைத்திருக்கும் அவர், “பிரெஞ்சு பிரதேசத்தில் வன்முறைச் செயல்கள் செய்யப்பட வேண்டும்" என காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025