Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்

18 தை 2025 சனி 12:34 | பார்வைகள் : 6900


இலங்கையில் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் வகை 2, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் 

 அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் ருவந்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே தொற்று நோய் அல்லாத குறிப்பாக நீரிழிவு நோய் வகை 2 அதிகமாக காணப்படுவது கவலை அளிப்பதோடு, அபாய எச்சரிக்கையை தூண்டியுள்ளது.

இதேவேளை,  கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களும் அதிகரித்துள்ளது. இது சுகாதார அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, இந்த நிலைமைகள் பொது சுகாதாரத்தில் சவாலை உருவாக்கி வருகின்றன.

இந்த  நோய் நிலைமைகளை குறைப்பதற்கு "சிறுவர்களுக்கு தேவையான சுகாதார அறிவை வழங்குவதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமானவற்றை தெரிவு செய்ய அவர்களுக்கு உதவ முடியும். அத்தோடு, நோய்கள் அதிகரிப்பதை குறைக்க முடியும்.

சிறுவர்களிடையே உயர் இரத்த அழுத்தம் நோய்  அதிகரித்து வருவது மேலும் கவலை அளிக்கின்றது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் , உடற்பயிற்சி இன்மை மற்றும் பிற நடத்தை மாற்றங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களே நோய்கள் அதிகரிப்புக்கு காரணமாகும்.

இந்த நோய்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் , அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் பாடசாலை சிறுவர்களிடையே சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிப்பதில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றார். 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்