Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நாடு

 சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நாடு

16 தை 2025 வியாழன் 15:44 | பார்வைகள் : 4437


ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்  சுற்றுலாப் பயணகளுக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு  ஸ்பெயின் நாடு தடை விதித்துள்ளது.


ஸ்பெயினுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், 10 வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பதாகக் கூறப்படுகிறது.  

ஆக, உள்ளூர்வாசிகளுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகவும், அதிக சுற்றுலாப்பயணிகளால் மக்கள் கூட்டம் ஏற்படுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.

ஆகவே, அந்நாட்டிலுள்ள 43 மாவட்டங்கள், சுற்றுலாப்பயணிகள் வீடுகளை வாடகைக்கு எடுக்க தடை விதித்துள்ளன.

அதாவது செவ்வாயன்று அமுலுக்கு வந்த இந்த தடை, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


ஸ்பெயின், பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் சுற்றுலாத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்