நோய்த்தொற்றின் உச்சம் நெருங்கி வருகிறது. தடுப்பூசிக்கு திரும்புங்கள்.

14 தை 2025 செவ்வாய் 09:47 | பார்வைகள் : 7008
"பிரான்சில் 90க்கும் அதிகமான மருத்துவமனைகள் 'வெள்ளை திட்டம்' எனப்படும் அதி உச்ச மருத்துவ தேவை உள்ள நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 'Grippe' தொற்றுநோய் இவ்வாண்டு மிக அதிகமானோருக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்றின் உச்சம் நெருங்கி வருகிறது. தடுப்பூசிக்கு திரும்புங்கள்" என Assistance publique-Hôpitaux de Paris யின் தலைமை இயக்குநர் வைத்திய கலாநிதி Nicolas Revel.
முந்தைய ஆண்டுகளை விட இவ்வாண்டு 'Grippe' நோய்க்கிருமிகள் வீரியம் மிக்கதாக இருப்பதுடன், தொற்றும் வேகமும் அதிகமாக உள்ளது என மீண்டும்..மீண்டும் பிரான்ஸ் சுகாதார அமைப்பு அறிவித்து வருகிறது. இதற்குக் காரணம் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் COVID19 பின்னரான காலத்தில் மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் மருத்துவ வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
Assistance publique-Hôpitaux de Paris யின் தலைமை இயக்குநர் வைத்திய கலாநிதி Nicolas Reve மேலும் குறிப்பிடுகையில் "தொற்றுநோயின் உச்சம் இன்னும் எங்களுக்கு முன்னால் உள்ளது, அதேவேளை தடுப்பூசி போடும் காலமும் இன்னும் இருக்கிறது. மக்கள் இதனை உணர்ந்து தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
'Grippe' வெறும் ஒரு தொற்று நோய் மட்டுமல்ல பிரான்சில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்துக்கு அதிகமான உயிர்களை பறிக்கின்ற ஒரு வீரியமான தொற்று நோயும் கூட.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025