கனடாவில் பனி நீரில் மூழ்கி 70 வயதுடைய நபர் பலி...

13 தை 2025 திங்கள் 06:34 | பார்வைகள் : 7904
கனடாவில் ரொன்ரோ பகுதியில் பனி படர்ந்த நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டொரன்டோ தீவு பகுதியில் அமைந்துள்ள ஒன்றாரியோ நதியில் படர்ந்திருந்த பனிப் படலத்தில் குறித்த நபர் நடந்து சென்ற போது பனி படலம் இடிந்து விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கிய குறித்த நபரின் சடலம் லகூன் வீதிக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிகமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பனி படர்ந்த நீர் நிலைகளுக்கு மேல் நடப்பது அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.