Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

2025ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

2025ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

12 தை 2025 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 7859


2025இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர்  விசாவும் இல்லாமல் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில், இந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன்  இலங்கை(Sri lanka) 96ஆவது இடத்தை பிடித்துள்ளது.


மேலும், 2025-இலும் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் சிங்கப்பூர்(Singapore) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

ஜப்பான் 193 நாடுகளுக்கான விசா-இல்லா அனுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில் சீனாவுக்கும் விசா இல்லாமல் செல்லும் சலுகை முதன்முறையாக இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

2024-இல் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின்(Spain) ஆகிய நாடுகள் இப்போது 192 நாடுகளுக்கு விசா-இல்லா அனுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

192 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழையும் அனுமதியுடன் ஆஸ்த்ரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸ்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, ஸ்வீடன்(Sweden) ஆகிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன.

அமெரிக்காவின்  கடவுச்சீட்டு
பெல்ஜியம், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா(Uk) மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

அதன்படி, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய கடவுச்சீட்டு மூலம் உலகின் 57 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.

ஆனால், கடந்த ஆண்டை விட இந்தியா 5 இடங்கள் சரிந்துள்ளதுடன் அமெரிக்காவின் கடவுச்சீட்டு 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் மற்றும் ஒரே நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது. கடந்த 2015 முதல் கூடுதலாக 72 இடங்களுக்கான விசா இல்லாத அணுகலை அந்நாடு பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் கடவுச்சீட்டு
இதன் மூலம் உலகளவில் 185 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் 32 இடங்கள் முன்னேற்றம் கண்டு, உலகின் 10வது சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை பெற்றுள்ளது.

பாகிஸ்தானின்(PAKISTAN) கடவுச்சீட்டு பலவீனமான கடவுச்சீட்டுகளின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

33 நாடுகளில் இருந்து இலவச விசா அனுமதியுடன் பாகிஸ்தான் 103ஆவது இடத்தில் உள்ளது.

அதேசமயம் ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, பாலஸ்தீனம், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட மேலே உள்ளன. சோமாலியாவின் பலவீனமான கடவுச்சீட்டுகளின் பட்டியலில் 102வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின்

வர்த்தக‌ விளம்பரங்கள்