காவல்துறையினர் வீட்டின் மீது தாக்குதல்.. இருவர் கைது!!
 
                    10 தை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 7337
காவல்துறையில் கடமையாற்றும் தம்பதிகள் இருவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Nanteuil-le-Haudouin (Oise) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அதேநகரில் பணிபுரியும் காவல்துறையினர் தம்பதிகள் வசிக்கும் வீட்டை நோக்கி தொடர்ச்சியாக மோட்டார் பட்டாசுகளை வீசியுள்ளனர். மொத்தமாக 14 தடவைகள் மோட்டார் பட்டாசு வீசப்பட்டதாகவும், 20 நிமிடங்கள்
தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிஷ்ட்டவசமாக எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் மேற்கொண்ட இருவரில் 32 வயதுடைய ஒருவரை சில நிமிடங்களில் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட 15 வயதுடைய சிறுவன் ஒருவனை மறுநாள் புதன்கிழமை Péroy-les-Gombries நகரில் வைத்து கைது செய்தனர். அவர்களது நோக்கம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan