லோகேஷ் கனகராஜ் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்!
9 தை 2025 வியாழன் 14:40 | பார்வைகள் : 4741
'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' படங்களை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நட்புக்காக பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக 'கைதி-2' படத்தை இயக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜிடத்தில், கமல், ரஜினி, விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்ட நீங்கள், அஜித்தை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, ''அஜித் சாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாகவே மனதளவில் இருந்து வருகிறது. விரைவில் அதற்கான முயற்சி எடுப்பேன். கூடிய சீக்கிரமே என்னுடைய அந்த ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்'' என்கிறார் லோகேஷ் கனகராஜ்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan