Paristamil Navigation Paristamil advert login

கொ(f)பி 'Coffee' உட்கொள்ளும் நேரத்தை அறிந்து கொள்வோம்.

கொ(f)பி 'Coffee' உட்கொள்ளும் நேரத்தை அறிந்து கொள்வோம்.

9 தை 2025 வியாழன் 11:20 | பார்வைகள் : 7024


ஐரோப்பிய சுகாதார அமைப்பு வெளியிட்ட 'கொ(f)பி உட்கொள்ளும் நேரத்தை' பிரான்ஸ் சுகாதார அமைப்பும் பருந்துரைக்கிறது. கொபி 'Coffee' நாளாந்தம் உட்கொள்ளும் 40,000 நபர்களிடம், அவர்கள் உட்கொள்ளும் அளவு, நேரம், அதன் விளைவு போன்றவற்றை தரவுகளாக வைத்துக்கொண்டு ஒரு நீண்ட ஆராய்ச்சி செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் படி கொ(f)பி ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்பதை முதலில் உறுதிப்படுத்துகிறது, கொ(f)பி அருந்துபவர்களுக்கு இறப்பு அபாயம் 16% குறைகிறது, இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயம் 31% குறைகிறது. ஆனால் அதனை அருந்தும் நேரம் காலையில் இருந்து மதியம் வரை என வரையறுக்கப்படுகிறது.

மதியத்திற்கு பின்னர் அருந்தும் கொ(f)பி ஆபத்தானது, அதேபோல் ஒரு சாதாரண மனிதர் கொபியை நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 கப்புக்கு மேலாகாமல் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது. அதேவேளை கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்களுக்கு  அதிகபட்சம் 1 அல்லது 2 ஆகும் கப் அருந்த வேண்டும் என மட்டுப்படுத்தப்படுதப்கிறது. அதேபோல் முதல் கொ(f)பிக்கும் இரண்டாம் கொ(f)பிக்குமான இடைவெளி குறைந்தது 3 மணிநேரங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆனா ..எங்கட தேத்தண்ணிய எப்பவும், எவ்வளவும் குடிக்கலாம்" 

வர்த்தக‌ விளம்பரங்கள்