பரிஸ் புறநகரில் வீடு இடிந்து விழுந்து - மூவர் காயம்!!
7 தை 2025 செவ்வாய் 17:49 | பார்வைகள் : 7959
பரிசின் மேற்கு புறநகரில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வந்த வீடொன்று இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஜனவரி 7, இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் இச்சம்பவம் Boulogne-Billancourt நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்த வேளையில், திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தின் போது மூன்று வேலையாட்கள் இருந்ததாகவும், அவர்கள் மூவரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan