திவ்யா பிரபாநிர்வாணமாக நடித்தது ஏன் ?
30 கார்த்திகை 2024 சனி 14:43 | பார்வைகள் : 5691
பாயல் கபாடியா இயக்கியுள்ள படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. பிரான்ஸில் நடைபெற்ற 77வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை பெற்றது இப்படம். கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
கேராளவில் இருந்து மும்பைக்கு நர்ஸ் வேலைக்கு செல்லும் இரு இளம் பெண்கள் பற்றிய கதை. ஒருவர் கட்டுப்பாடுடன் வாழ நினைக்கிறவர். இன்னொருவர் கட்டற்ற சுதந்திரத்துடன் வாழ நினைக்கிறவர். இவர்களின் வாழ்க்கை எப்படி என்பதுதான் படம். இந்த படத்தில் மலையாள நடிகை திவ்ய பிரபா ஆண்களுடன் நெருக்கமான பல காட்சிகளில் நடித்துள்ளார். குறிப்பாக நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளார். இது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதனால் அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.
இது குறித்து தற்போது திவ்யா பிரபா கூறியிருப்பதாவது: நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போதே கேரளாவில் இருந்த சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன். கசிந்த வீடியோவை பகிர்ந்து வரும் நபர்கள் வெறும் 10 சதவிகித மக்கள். அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்துக்கு ஒப்புதல் கொடுத்த தணிக்கை குழுவில் மலையாளிகளும் இருந்தனர்.
ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். அந்த வகையில்தான் 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படத்திலும் எனது கதாபாத்திரம் பிடித்து நடித்தேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில், நிர்வாண காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நான் பல விருதுகளை வென்றிருக்கிறேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நிர்வாணமாக நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை. என்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan