Essonne : மூவரை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற .. சாரதி கைது!!
29 கார்த்திகை 2024 வெள்ளி 10:02 | பார்வைகள் : 10195
மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணித்து, பாதசாரி கடவையில் வீதியை கடக்க முற்பட்ட மூவரை மோதித்தள்ளியுள்ளது. இதில் மூவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Orsay (Essonne) நகரில் இச்சம்பவம் நவம்பர் 28, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. வயதுடைய சாரதி ஒருவர் காலவதியான சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வைத்துக்குகொண்டு, மகிழுந்தில் வேகமாக பயணித்துள்ளார். Rue Louis-Scocard வீதி மற்றும் யில் உள்ள பாதசரிகள் கடவையில், வீதியினை கடக்க, முற்பட்ட மூன்று முதியவர்களை (74 மற்றும் 89 வயதுடைய இரு பெண்களும், 75 வயதுடைய ஆண் ஒருவரும்) மகிழுந்து மோதித்தள்ளியுள்ளது.
இதில் குறித்த மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் Kremlin-Bicêtre (Val-de-Marne) மருத்துவமனையிலும், ஒருவர் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையிலும், மூன்றாமவர் Orsay நகரில் உள்ள Paris-Saclay மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் முன்னதாகவே அறிவார்கள் எனவும், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan