A13 : சுங்கச்சாவடிகள் அகற்றம்!!

28 கார்த்திகை 2024 வியாழன் 16:45 | பார்வைகள் : 6034
A13 நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் (barrières de péage) அனைத்தும் அகற்றப்பட உள்ளன.
குறித்த நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் நிறுவனமான Sanef, இதனை நேற்று அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, தடையில்லாமல் சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுங்கக்கட்டணத்தை தொடர்ந்தும் செலுத்த வேண்டும் என்றபோதும், பயணம் முடிவிலோ அல்லது பயணம் ஆரம்பிக்கும் முன்னரோ, சில நாட்களுக்கு முன்பாகவோ அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கட்டணம் செலுத்தப்பட்டால் அது வாகனங்களின் இலக்கத்தகடுகளுடன் இணைக்கப்பட்டு பின்னர் அவை கண்காணிப்பு கமராக்களால் கண்காணிக்கப்படும். சுங்கக்கட்டணம் செலுத்தாமல் பயணித்தால், வங்கிக்கணக்கில் இருந்து அந்த தொகை கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இவை அகற்றப்பட்டும் எனவும், 10 ஆம் திகதியில் இருந்து இந்த வசதி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025