Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் இருண்ட உக்ரைன்...!

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் இருண்ட உக்ரைன்...!

28 கார்த்திகை 2024 வியாழன் 14:33 | பார்வைகள் : 5010


உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் மேற்கு விவிவ் பிராந்தியத்தில் 523000க்கும் அதிகமானவர்களிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான நிலத்தடி பகுதிகளிற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதிகளில்தஞ்சமடைந்துள்ளனர்.

உக்ரைனின் மேற்கில் உள்ள மூன்று பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மேற்கு பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் எட்டு பிராந்தியங்களில் நேற்றிரவு ரஷ்ஸ்யாவின் ஏவுகணைகளை அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் தலைநகரில் இரண்டு இடங்களில் ஏவுகணை சிதறல்களை காணமுடிந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பல ஏவுகணைகள் செயல்இழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்