Paristamil Navigation Paristamil advert login

Seine-et-Marne : பாரிய வெடிப்பு சம்பவம்.. பெண் பலி!!

Seine-et-Marne : பாரிய வெடிப்பு சம்பவம்.. பெண் பலி!!

28 கார்த்திகை 2024 வியாழன் 12:43 | பார்வைகள் : 6203


Seine-et-Marne மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்றில் 30 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

நவம்பர் 27, புதன்கிழமை காலை 5 மணிக்கு Saint-Loup-de-Naud நகரில் உள்ள வீடொன்று திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்து, இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் உடனடியாக அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 

60 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய பெண் ஒருவரை மீட்டெடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் 1993 ஆம் ஆண்டு பிறந்த 31 வயதுடையவர் என அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்