உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு
28 கார்த்திகை 2024 வியாழன் 10:13 | பார்வைகள் : 12854
உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் திகதியை நவம்பர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை நிலைமையை மதிப்பீடு செய்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்தார்.
நவம்பர் 29ஆம் திகதிக்கு பின்னர் மழை மற்றும் காற்றின் தீவிரம் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த அவர், நவம்பர் 29ஆம் திகதிக்கு பின்னர் காலநிலையை ஆராய்ந்த பின்னர் பரீட்சையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் காலநிலை மேம்பட்ட பின் இயல்பு நிலைக்குத் திரும்ப போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், நிலைமையை மதிப்பிட்டு புதிய திகதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நிலவும் பாதகமான காலநிலை காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan