எம்பாப்பே செய்த தவறால் ரியல் மாட்ரிட் படுதோல்வி! மிரட்டிய லிவர்பூல்
28 கார்த்திகை 2024 வியாழன் 09:38 | பார்வைகள் : 4044
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
Anfield மைதானத்தில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் (Liverpool) மற்றும் ரியல் மாட்ரிட் (Real Madrid) அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடியதால் கோல் ஏதும் விழவில்லை. இரண்டாம் பாதியின் 52வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 61வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) பெனால்டி வாய்ப்பில் On Goal ஷாட் அடிக்க, எதிரணி கோல் கீப்பர் Caoimhin அபாரமாக செயல்பட்டு தடுத்தார். இதனால் எம்பாப்பே மற்றும் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் லிவர்பூல் வீரர் Cody Gakpo 76வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து ரியல் மாட்ரிட் வீரர்கள் போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan