உடல் எடை குறைப்பு மருந்தொன்றுக்கு கனடா அரசு ஒப்புதல்

28 கார்த்திகை 2024 வியாழன் 09:20 | பார்வைகள் : 5438
ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து, மாரடைப்பை தடுக்கும் நோக்கில் உடல் எடை குறைப்பு மருந்தொன்றுக்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது.
கனடாவின் சுகாதார ஆணையம், Novo Nordisk நிறுவனத்தின் வேகோவி (Wegovy) எனப்படும் உடல் எடை குறைப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிலருக்கு நெஞ்சு சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கும் நோக்கத்துடன் இந்த மருந்துக்கு ஒப்புதல் வழங்கபட்டுள்ளது.
இந்த மருந்து, முக்கியமாக நெஞ்சுக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள (cardiovascular disease) மக்களுக்கு, உயிர்காக்கும் முறையில், முதல் முறையாக ஒப்புதல் பெறுகிறது என Novo Nordisk தெரிவித்துள்ளது.
இது 2021 முதல் கனடாவில் உடல்பருமனை (obesity) கையாளுவதற்கான மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில், இது ஐரோப்பிய ஒன்றியத்திலும் முக்கியமான நெஞ்சு சம்பந்தமான பிரச்சினைகளையும் பக்கவிளைவுகளை தடுக்க பயன்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும், வேகோவி மருந்து, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் எடையுள்ளவர்களுக்குப் பெரும் நெஞ்சு பிரச்சினைகள் மற்றும் மாரடைப்புகளை தடுக்க பயன்படுகிறது.
செமாக்ளூடைடு (Semaglutide) எனும் ரசாயன அடிப்படையிலான இந்த மருந்து, ஆபத்து கொண்டவர்களுக்கு நம்பகமான தீர்வாக கருதப்படுகிறது.