'சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்த் திருமணம்.
28 கார்த்திகை 2024 வியாழன் 07:45 | பார்வைகள் : 4977
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ சீரியலில் நாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்தின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு சின்னத்திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
’சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் ’பொன்னி’ சீரியல் நடிகை வைஷ்ணவி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று சென்னையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பல சின்னத்திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஷ்ணவியின் கழுத்தில் தாலி கட்டியதும், அவரது நெற்றியில் வெற்றி வசந்த் அன்பு முத்தமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan