Paristamil Navigation Paristamil advert login

 ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிப்பு

 ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிப்பு

27 கார்த்திகை 2024 புதன் 13:46 | பார்வைகள் : 9249


இந்தோனேசியாவில் மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை  வெடித்து சிதறியுள்ளது.

 ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை நேற்று வெடித்து சிதறியது.

இதில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறியன.

எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதனையடுத்து ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்