'விடுதலை 2' வசனம் யாருக்கு?
27 கார்த்திகை 2024 புதன் 13:40 | பார்வைகள் : 5515
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கேரக்டர்களில் நடித்த 'விடுதலை 2’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடுதலை’ படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் பாகமும் முதல் பாகத்தை விட அதிக வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘விடுதலை 2’ படத்தின் டிரைலரில் டீ ஏஜிங் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட விஜய் சேதுபதியின் இளமையான கேரக்டர், மஞ்சு வாரியரின் அசத்தலான நடிப்பு, கௌதம் மேனனின் அனுபவம் உள்ள நடிப்பு, சூரியின் அர்ப்பணிப்பு ஆகியவைகளால் சாதகமான அம்சங்களாக இருக்கிறது. அதேபோல், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ட்ரெய்லரில் இருக்கும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக,வன்முறை என்பது எங்கள் மொழி இல்லை, ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும்" என்ற வசனம்,"தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்; அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது" என்ற வசனம் ஆகியவை பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
இதில் "தத்துவம் இல்லா தலைவர்கள்" என்ற வசனம் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய ஒரு பெரிய நடிகரை மறைமுகமாக தாக்குவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த வசனத்துக்கு அந்த நடிகரின் தரப்பிலிருந்தோ, அவரின் ரசிகர்களின் தரப்பிலிருந்தோ பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். இது எதிர்கால அரசியல் விவாதங்களுக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan