வெள்ளத்தில் மூழ்கியு யாழ். நல்லூர்!

27 கார்த்திகை 2024 புதன் 10:43 | பார்வைகள் : 8216
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகம், வர்த்தக நிறுவனங்கள்... என அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ-9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025