உலகில் முதல்முறையாக Parallel Satellite Pair! ஐரோப்பாவுடன் இணைந்த இஸ்ரோ
26 கார்த்திகை 2024 செவ்வாய் 09:04 | பார்வைகள் : 4492
சூரிய கரோனாவை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இஸ்ரோ இணைந்துள்ளது.
சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை ஆய்வு செய்ய இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்துள்ளன.
இந்த கூட்டணியின் மூலம் ஐரோப்பிய நிறுவனம் உருவாக்கிய 2 தனித்துவமான கருவிகளை சுமந்து, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ரொக்கெட் விண்ணில் டிசம்பர் 4ஆம் திகதி ஏவப்பட்ட உள்ளது.
இது உலகில் முதல்முறையாக ஏவப்படும் Parallel Satellite Pair ஆகும். சூரிய கரோனோவை ஆய்வு செய்ய 2 செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக்கோள் கருவிகள் - இந்தியாவின் ஆதித்யா எல்1 மிஷனில் உள்ளது போன்றதாகும். இவை Parallel வடிவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பயணிக்கும். மேலும் சுமார் 150 மீற்றர் தொலைவில் இணையான அமைப்பில் பறக்கும்.
இஸ்ரோ 600 x 60530 கி.மீ உயரமான நீள்வட்ட சுற்றுப்பாதையில், ஒன்றாக அடுக்கப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தும்.
பின்னர் செயற்கைக்கோள்கள் இணையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan