சிகரெட் தொழிற்சாலைக்கு சீல்! -5 மில்லியன் சிகரெட் பெட்டிகள் பறிமுதல்!!

25 கார்த்திகை 2024 திங்கள் 15:17 | பார்வைகள் : 7079
பிரபல சிகரெட் நிறுவனங்களின் பெயரில் போலி சிகரெட் பெட்டிகள் தயாரித்த பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, Bourg-lès-Valence (Drôme) நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதேபகுதியில் ரகசியமாக இயங்கிவந்த தொழிற்சாலை ஒன்றையும் கைப்பற்றி அதற்கு நிரந்தரமாக சீல் வைத்தனர்.
அத்தோடு 5 மில்லியன் சிகரெட் பெட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் Marlboro நிறுவனத்தின் சிகரெட் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 5 தொன் எடையுள்ள புகையிலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025