உலகின் மிக உயரமான பெண்ணை சந்தித்த உயரம் குறைந்த பெண்!

24 கார்த்திகை 2024 ஞாயிறு 12:22 | பார்வைகள் : 3719
உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்த துருக்கியைச் சேர்ந்த ருமேசா என்ற பெண்ணை இந்தியாவைச் சேர்ந்த உயரம் குறைந்த ஜோதி அம்கே என்ற பெண் சந்தித்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஹோட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.