பிரித்தானியாவை கடுமையாக தாக்கும் Bert புயல்...

24 கார்த்திகை 2024 ஞாயிறு 07:41 | பார்வைகள் : 6111
பிரித்தானியாவில் கடுமையாக Bert புயல் தாக்கி வருகின்றது.
இங்கிலாந்தின் வின்செஸ்டர் அருகே A34 வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ் வொர்த்தி மற்றும் வின்னால் இடையே தெற்கு நோக்கி செல்லும் பாதையில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 7.47 மணிக்கு மீட்புப் படை அழைக்கப்பட்டது.
அங்கு ஒரு கருப்பு Mercedes E350 இன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார்.
இதற்கான காரணம் குறித்து ஹாம்ப்ஷைர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில்வர் நிற Skoda Kodiaq காரும் சேதமடைந்தது, ஆனால் அதில் இருந்தவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் புயலால் நேர்ந்ததா என்பதை பொலிஸார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர். மரம் விழுவதற்கு பெர்ட் புயலின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த புயல் பிரித்தானியாவில் பல இடங்களில் காற்று, மழை, பனி போன்ற வானிலை குறுக்கீடுகளை உருவாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல்களைப் பெற பொலிஸார் பொதுமக்களிடம் உதவிக்கோருகின்றனர். டாஷ்காம் காட்சிகளுடன் கூடிய தகவல்களை 101 எனும் எண்ணிற்கு அழைத்து அல்லது ஆன்லைனில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் வாகனப்பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025