Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : இரு பெண்களை அடுத்தடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்பட முயற்சித்த ஒருவர் கைது!

பரிஸ் : இரு பெண்களை அடுத்தடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்பட முயற்சித்த ஒருவர் கைது!

21 கார்த்திகை 2024 வியாழன் 17:54 | பார்வைகள் : 9402


16 வயதுடைய சிறுமி மற்றும் 29 வயதுடைய ஒருவர் என அடுத்தடுத்து இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Crimée மெற்றோ நிலையத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 27 வயதுடைய ஒருவர் முதலில் 16 வயதுடைய சிறுமி ஒருவரை பின் தொடர்ந்து சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் வருகை தருவதற்கு முன்னர் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளார்.

பின்னர் இரண்டு மணிநேரங்கள் கழித்து 29 வயதுடைய பெண் ஒருவரை கட்டிடம் ஒன்றின் தரிப்பிடப்பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். அங்கும் காவல்துறையினர் அழைக்கப்பட அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு, குறித்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் மாலை 4.15 மணி அளவில் Boulevard Macdonald பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்தனர்.19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்